ITamilTv

மாணிக்கம் தாகூர் மீதான புகார் மீது ஒரு வாரத்தில் முடிவு – தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் உறுதி

Manickam_Tagore 02

Spread the love

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு எதிரான புகார் மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.


மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் நடப்பு எம்.பி.யான மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிட்டார்.
அவர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
தேர்தலின் போது விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் தேர்தல் முகவர்களும், கூட்டணி கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர்.

இதையும் படிங்க: உடல் பருமன் குறைக்க அறுவை சிகிச்சை… கடைசியில் நடந்த கொடூரம்

பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் தேர்தல் முகவர்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி ஆகியோருக்கு எதிராக விருதுநகர், மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீசார் வழக்குப்பதிவு செய்த போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு அனுப்பியும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், மனுதாரர் சசிகுமாரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் தெரிவித்த பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:”திமுக அரசின் மோதல் போக்கு..” மாணவ, மாணவியரின்..- முதல்வரை தாக்கிய ஓபிஎஸ்!


Spread the love
Exit mobile version