கேரளாவில் நிபா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேருக்குக் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டிருப்பதாகவும் அவர்களைத் தனிமைப்படுத்தி அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Also Read : உணவுக்காக யானைகளை கொலை செய்ய ஜிம்பாப்வே அரசு திட்டம்..!!
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியான கூடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே, கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் – கேரளா எல்லை பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து காய்ச்சல் பரிசோதனை; காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் மருத்துவமனை சென்று உடனே பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.