வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்து உள்ளார்.
தெரிவித்துள்ளார். கொரனோ காலகட்டத்தில் சரிந்த பொருளாதாரத்தை சரிசெய்ய 2 ஆண்டுகளாக குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருந்தது.
அந்த வகையில் 2020 ஆம் ஆண்டில் 4% ஆக இருந்த வட்டி விகிதம் புதிய கொள்கையின் படி 6.25% உயர்த்தபட்டது. அதன்பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பிப்ரவரி மாதம் முதல் 6.5% உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்ளகை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் பேசிய வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடர்வதாகவும் நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பணவீக்கம்,கடன் வாங்குதல் அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.