Site icon ITamilTv

PF கணக்கில் இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம்!

can withdraw up to 1 lakh in PF account

Spread the love

can withdraw up to 1 lakh in PF account : PF கணக்கில் இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம்! EPF ன் 68-J கூறுவது என்ன?

பிஃப் கணக்கு வைத்திருப்பவரா … நீங்கள்? அப்ப உங்களுக்குத் தன இந்தக் குட் நியூஸ்.

பிஎஃப் என்பது நிறுவனம் சார்பில் மற்றும் தொழிலாளர் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து தொழிலாளர்களுக்காகப் பிரத்தேயகமாக உருவாக்கப்பட்ட பிஎஃப் கணக்கில் மாதந்தோறும் சேமிக்கவுதவும் தளமாகும்.

குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்தச் சமூக நலத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது can withdraw up to 1 lakh in PF account.

இதையும் படிங்க : வைகை தடுப்பணை… ஆற்றுச் சுழலில் சிக்கி இருவர் உயிரிழந்த சோகம்..!

தொழிலாளர்கள் தங்களின் பல தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுத்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக தொழிலாளர்கள் வீடு கட்ட, வீடு வாங்க, திருமணம், சிகிச்சை போன்ற செலவுகளுக்கு நீங்கள் பணம் எடுக்கலாம்.

EPF படிவம் 31 மூலம் தொழிலாளர்கள் இருப்புத்தொகையில் தேவையான பகுதியளவு பணத்தை இணையத்தில் அப்ளை செய்து வாங்கிக்கொள்ளலாம்.

தற்போது ஏப்ரல் 16 அன்று வெளியிடப்பட்ட EPFO சுற்றறிக்கையின் படி, பணம் எடுப்பதற்கான விதிமுறைகளைத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மாற்றியுள்ளது.

அதாவது சிகிச்சைக்காகப் பணம் எடுப்பதற்கான அட்வான்ஸ் தொகையை மட்டுமே பிஎஃப் அமைப்பு இரட்டிப்பாக்கியுள்ளது.

மருத்துவம் தொடர்பான அட்வான்ஸ் தொகைக்கான ஆட்டோ கிளைம் வரம்பு ரூ.50,000 ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, கணக்கு வைத்திருப்பவர்கள் பிஎஃப் பணத்தை உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

தொழிலாளர் அல்லது அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மருத்துவச் செலவுகளுக்காக EPF திட்டத்தின் 68-J பத்தியின் கீழ் முன்பணத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் முதலில் அவரைப் பரிசோதித்து அதற்கான ரசீது மற்றும் ஆவணங்களுடன் பின்னர் நீங்கள் கிளைம் செய்யலாம்.

அரசு மருத்துவமனை, அரசு உதவி பெறும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படும்போது இவை ஏதும் தேவைப்படாது.

இதையும் படிங்க : கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்து… ஏன் தெரியுமா..?


Spread the love
Exit mobile version