Vaigai barrage : தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலுள்ள ராமலிங்கபுர கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லோகேஸ்வரன் மற்றும் சுந்தரமூர்த்தி. நண்பர்களான இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
தேர்தல் காரணமாக விடுமுறை அறிவித்ததால் தங்களது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
நேற்று விடுமுறை என்பதால், இருவரும் சேர்ந்து ஊரிலிருந்த மற்ற நண்பர்களை அழைத்து கொண்டு, வைகை அணைக்கு முன்புறம் உள்ள தடுப்பணைக்குக் குளிக்க சென்றுள்ளனர்.
அங்கு தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி கதைகளைப் பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்லத் திட்டம்! ரஷ்ய உளவுத் துறைக்கு தொடர்புள்ளதா?
அப்போது எதிர்பாராத விதமாகத் தடுப்பணைக்கு முன்பு இருந்த ஆற்றுச்சுழலில் லோகேஸ்வரன் மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்ற சென்ற சுந்தரமூர்த்தியும் அவருடன் சேர்ந்து சூழலில் மாட்டிக் கொண்டார் Vaigai barrage.
சுழலில் சிக்கிய இருவரும் வெளிவர முடியாமல் தத்தளித்தனர். இதனை பார்த்த மற்றவர்கள் செய்வதறியாது நின்றனர்.
சிலர் சுற்றி இருந்தவர்களின் உதவியை நாடினர். சுழலின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நண்பர்களை மீட்க முடியாமல் தவித்த மற்றவர்கள், உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வைகை அணை காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தண்ணீரில் மூழ்கியவர்களின் உடல்களைச் சடலமாக மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக இவர்களின் உடல்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என வந்த வைகை அணை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வைகை அணை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறையைக் கழிக்க வந்த கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகள் -வீரமணி!