Site icon ITamilTv

எதிர்க்கட்சி துணைத் தலைவர் Seat மாற்றம்

Seat

Seat

Spread the love

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை (Seat) விவகாரம் தொடர்பாக நேற்று கேள்வி எழுபட்ட நிலையில் இவ்விவகாரம் குறித்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .

இன்று நடைபெறும் சட்டப்பேரவை நிகழ்வில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் ஏற்கெனவே தேர்வான நிலையில்இன்று அவருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு, 2வது வரிசையில் முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நீண்ட காலமாக இந்த எதிர்க்கட்சி துனை தலைவர் விவகாரம் அனல் பறக்க நடைபெற்று வந்தது .

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்விலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார் .

இதையடுத்து அதற்கு பதில் கொடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் நேற்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு (Seat) சுமூக தீர்வு காணும் வகையில் இன்று சட்டப்பேரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இருக்கை எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அதற்கான விடியலுக்காகவும்

சட்டப்பேரவையில் யார் வேண்டுமானாலும் கேள்விகளை எழுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பான தனித் தீர்மானத்தையும் முதலமைச்சர் கொண்டு வர உள்ளார் .

1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் அதே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை தொடரும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தனி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் மேலும் சில தீர்மானங்களையும் மத்திய பட்ஜெட் குறித்த சில கேள்விகளையும் முன்வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read :https://itamiltv.com/pulwama-attack-completes-5-years-today/

நேற்று எந்த ஒரு அமர்க்களமும் இல்லாமல் சட்டப்பேரவை முடிந்த நிலையில் இன்றும் அதே மாறி முடிகிறதா இல்லை வேறு ஏதும் சம்பவங்கள் நடைபெறுகிறதா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.


Spread the love
Exit mobile version