ITamilTv

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட்!

Spread the love

கடந்த மே 20ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், இன்று கேரளா மாநிலத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை (orange alert) விடுத்துள்ளது.

அதன்படி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்..

கேரளா மாநிலத்தில் அடுத்த 5 நாட்களில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யும். இன்றும், நாளையும் (27.06.23 – 28.06.23) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்று ஜூன் 27 கேரளா மற்றும் மாஹே பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ஜூன் 29 வரை கடலோர கர்நாடகத்திலும் கனமழை பெய்யக்கூடும்.

கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் (orange alert) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் கேரள கடலில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version