Site icon ITamilTv

விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் விருது – EPS Wish

EPS Wish

EPS Wish

Spread the love

மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி EPS Wish வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து EPS Wish வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தேமுதிக நிறுவன தலைவரும், தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரமுமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் மறைந்த திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எனது நன்றி.

இதேபோன்று, பத்ம விபூஷண் விருதினைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி வைஜயந்திமாலா பாலி, திருமதி பத்மா சுப்ரமணியம்,

பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ள வள்ளி ஒயில் கும்மி ஆட்ட கலைஞர் திரு. பத்திரப்பன், குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா,

எழுத்தாளர் திரு. ஜோடி குரூஸ், மருத்துவர் நாச்சியார், நாதஸ்வர இசைக் கலைஞர் திரு. சேஷம்பட்டி டி. சிவலிங்கம் ஆகியோருக்கு எனது நல்வாழ்த்துகள் என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேப்டன் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் :

விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி. அவர் இருந்த போதே கொடுத்திருந்தால் சந்தோசமாக விருதை பெற்றிருப்போம்.

காலம் கடந்து காலன் எடுத்து சென்ற பிறகு அளிக்கப்பட்ட இந்த விருது கௌரவமான விருது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது அவரது புகழுக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்த்திருக்கிறது.

தன்னலம் பாராமல் பலருக்கு உதவி, பசியோடு வரும் எளியோரை கண்டபோதெல்லாம் வாடி அவர்களுக்கு உணவளித்து தானும் மகிழ்ந்து,

தமிழ்நாட்டு மக்களின் கேப்டனாக திகழும் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு இந்த விருது வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி

Also Read : https://itamiltv.com/sks-ayalaan-gearing-up-for-ott-release/

கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கிய பெருமை படுத்தி உள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் .


Spread the love
Exit mobile version