Site icon ITamilTv

” திருமணத்திற்கு NO சொன்ன பெற்றோர்..”விண்ணுக்கு சென்ற காதலி.. காதலனுக்கு நேர்ந்த விபரீதம்..!!

Spread the love

பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலர்கள் இருவரும் தற்கொலை(suicide) செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்(Chengalpattu )கூடுவாஞ்சேரி அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் 27 வயதான அசோக். இவர் வண்டலூரில் தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி.

இந்த நிலையில்அசோக்கும் ஷாலினியும் நான்கு ஆண்டுகளாகக்  காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.மேலும்  தனது காதல் குறித்து அசோக் தனது வீட்டில்  கூறவே இவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஷாலினியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷாலினி காதலன் அசோக்கிடம் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

ஆனால்  அசோக் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஜனவரி 4-ம் தேதி ஷாலினி தற்கொலை(suicide) செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினரிடம் எந்தவித தகவலும் இன்றி  ஷாலினியின் பெற்றோர் ஷாலினியின் உடலைத் தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  கடந்த 20 நாட்களாகக் காதலியின் இறப்பை உணர முடியாத அசோக் மன அழுத்தத்திலிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அசோக் தனது அறைய  பூட்டிக்கொண்டு வெகு நேரம் ஆகியும் வெளியே வரதால் அறையைத் உடைத்து திறந்து பார்த்த பொழுது அசோக் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் பெற்றோருக்கு அதிர்ச்சியடைந்த  பெற்றோர்  இந்த சம்பவம் தொடர்பாக மறைத்தலை நகர் காவல் துறையினர் அசோக்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஷாலினி பெற்றோர் மற்றும் அசோக்  பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Spread the love
Exit mobile version