Site icon ITamilTv

Passage of resolutions : கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

Passage of resolutions

Passage of resolutions

Spread the love

பெருந்துறையில்,மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மண்டல மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் (Passage of resolutions) நிறைவேற்ற பட்டுள்ளது .

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மண்டல மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

ஏராளமான தொடந்தர்களின் ஆரவாரத்துடன் நடைபெற்ற இந்த மண்டலா மாநாட்டில் ஏராளமான முக்கிய நிகழ்வுகள் நடந்தேறியது.

அதன் ஒருபகுதியாக இந்த மண்டலா மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மண்டல மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் (Passage of resolutions) :

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டுமென்பது நீண்டகால கோரிக்கை. சில அரசியல் காரணங்களால் மதுரையிலே எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது.

இருந்தாலும் கூட பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தேவை இன்னும் இருக்கிறது. பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க அரசு முன்வர வேண்டும்.

தென்னை விவசாயிகளில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க ஒன்றிய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்

அவினாசி, தாராபுரம் சட்டமன்ற தொகுதிகள் போன்று தமிழ்நாட்டில் பல சட்டமன்ற தொகுதிகள் நீண்டகாலமாக தனி தொகுதிகளாகவே தொடர்கின்றன.

இதன்மூலம் மற்ற சமுதாயங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நீண்ட காலமாக தனி தொகுதியாவே தொடர்கின்ற சட்டமன்ற தொகுதிகளை பொது தொகுதிகளாக மாற்ற அரசு முன்வர வேண்டும்.

பெரிய மாவட்டங்களை சிறிய மாவட்டங்களாக பிரிப்பதன் மூலமாக நிர்வாகத்தை மேம்படுத்த முடியும். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சிறிய மாவட்டங்கள் சிறு, சிறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருகின்றன.

ஆனால் பெரிய மாவட்டமான கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்கள் பிரிக்கப்படாதது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டமும், கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டமும், ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டமும்,

திருச்செங்கோடை தலைமையிடமாக ஒரு மாவட்டமும் பிரிக்கப்பட வேண்டும். அரசு அதற்கான திட்டங்களை விரைவாக தீட்ட வேண்டும்

Also Read :https://itamiltv.com/car-terrible-accident-driven-by-a-school-student/

திருச்செங்கோடை தலைமையிடமாக ஒரு மாவட்டமும் பிரிக்கப்பட வேண்டும். அரசு அதற்கான திட்டங்களை விரைவாக தீட்ட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version