Site icon ITamilTv

Political sea : கரை சேருமா விஜயின் அரசியல் கட்சி

Political sea

Political sea

Spread the love

அரசியல் எனும் கடலில் (Political sea) விஜய்யின் கட்சி கரை சேருமா இல்லை மூழ்கி போகுமா என்பதை பார்க்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என நடிகர் விஜய் பெயர் சூட்டி உள்ளார்.

தமிழ் திரையுலகில் உச்சம் தோட்ட முன்னணி நடிகாராக இருக்கும் நடிகர் விஜய் சமீப காலமாக பொதுவெளியில் மக்கள் நலனுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அந்த செய்தி ஊரறிந்த உலகறிந்த உண்மை ஆகிவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அண்மையில் சென்னை பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதாகவும், இந்த கட்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சொன்னது சொன்னபடி நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் :

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிட விருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாகவும்,

அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் எனவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜயின் இந்த அரசியல் பயணத்திற்கு பலரும் வாழ்த்து தருவித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் .

நான் விஜய்யை சிறுமைப்படுத்த விரும்பவில்லை. (Political sea) அரசியல் என்பது பெருங்கடல். மிகப்பெரிய சமுத்திரம். அதில் நீந்தி கரை சேருபவர்களும் இருப்பார்கள். மூழ்கியும் போவார்கள்.

Also Read ;https://itamiltv.com/captain-miller-in-prime-soon/

விஜய் கரைசேருவாரா மூழ்கி போவாரா என்பதை பார்க்கலாம். அதை மக்களே தீர்மானிப்பார்கள்.யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுக்ககளை யாரும் கை வைக்க முடியாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version