உத்தராகண்ட்டில் ராமாயண நாடகத்தை சாக்காக வைத்து சிறை கைதிகள் இருவர் தப்பியோடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவத்தும் நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது .
இதில் நவராத்திரியை ஒட்டி உத்தராகண்ட்டில் உள்ள ஹரித்வார் சிறைக் கைதிகளால் ராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது அப்போது காவலர்கள் மற்றும் கைதிகள் நாடகத்தை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த போது ராமாயண நாடகத்தில், சீதையை தேடிச் செல்லும் சாக்கில் வானர வேடமிட்ட 2 கைதிகள் தப்பியோடி உள்ளனர்.
Also Read : பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது..!!
சிறைச்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கிருந்த ஏணியில் ஏறி தப்பித்துள்ளதாக போலீசாரை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
தப்பைத கைதிகளில் ஒருவர் கொலை வழக்கிலும், மற்றொருவர் கடத்தல் வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்றும் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி தப்பியோடிய கைதிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் கைதிகள் பிடிபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.