Site icon ITamilTv

banwarilal prohit- ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்!

banwarilal prohit

banwarilal prohit

Spread the love

banwarilal prohit-பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கும்

மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Sasikala Meet-” எதிரே வந்த சசிகலா..” காரில் இருந்து இறங்கி ஓபிஸ் செய்த காரியம்!!

அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் (UT) நிர்வாகி பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார்.

இந்த எதிர்பாராத அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால தலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார்.

இதையும் படிங்க: கோபமாக இருக்கும் போது செக்ஸ்? இது என்ன பண்ணும் தெரியுமா?

இதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகும், அம்மாநில அரசுடனும் கடுமையான மோதல் போக்கு நிலவியது.

தற்போது, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில், பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

கல்வியாளர், சமூக ஆர்வலர் என அறியப்பட்ட பன்வாரிலால் புரோகித், ஆளுநராக அஸ்ஸாம் மற்றும் தமிழகத்தை தொடர்ந்து, பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூடியின்

இதையும் படிங்க:Tvk vijay-”விஜய் கட்சியின் பெயரில் திராவிடம் என்ற வார்த்தை இல்ல..”-அன்பில் மகேஸ்!

நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார். தற்போது, அந்த பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

பன்வாரிலால் புரோகித்(banwarilal prohit) அரசியல் வாழ்க்கையில், மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், ‘தி ஹிட்டாவாடா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், மேலும்,

மத்திய இந்தியாவின் அரசியல் மற்றும் ஊடகத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version