Site icon ITamilTv

கேரளாவின் புதிய அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக – ஓ.பன்னீர்செல்வம்!!

O. Panneerselvam

Spread the love

கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கான உரிமை தாரைவார்க்கப்பட்டதுபோல், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக விவசாயிகளுக்குள்ள உரிமையும் காவுகொடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடையே நிலவுகிறது என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..

“மதுரை, நிண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் பற்றும் பாசன வசதிக்கு பயன்படும் முக்கிய அணையாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது.

தென் தமிழக மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை இன்றைக்கும் வலுவாக இருப்பதற்குக் காரணம். அந்த அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.

பொதுவாக புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர் அழுந்தம்; அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பருவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தன இப்படிப்பட்ட புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில், கண்ணாம்பு சர்க்கி கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு ஆகும்.

எனவே நான், புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை இன்றளவும் உறுதியாகவும், வலிமை மிக்கதாகவும் விளங்குகிறது.

இது மட்டுமல்லாமல், குறுகிய கால திட்டமாக, அணையின் எடையை அதிகரிக்கும் பொருட்டு, 21 அடி அகலத்திற்கு, மூன்று அடி பருமன் கொண்ட ஆர்.சி.சி. கட்டுமானப் பணி அணையின் முழு நீளத்திற்கு அதன் மேற்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடுத்தா கால நடவடிக்கையாக, இறுக்கு விசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அணையின் அடித்தளத்துடன் எஃகு சும்பிகள் இழுத்துக் கட்டப்பட்டுள்ளன.

நீண்ட கால நடவடிக்கைபாக, அணையின் பின்புறத்தில் 10 அடி ஆழம் 32 அடி அகலத்திற்கு, தரை மட்டத்திலிருந்து 145 அடி உயரத்திற்கு ஆர்.சி.சி. கட்டுமானம் அணையின் தலைப் பகுதியுடன் இணையும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி. தற்போதுள்ள அணை மற்றும் புதிய கட்டுமானம் ஆகியவை ஒரே அணை போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அதனால்தான், முல்லைப் பெரியாறு அணையின் வழக்கினை விசாரித்த உச் நீதிமன்றம், வல்லுநர்களின் ஆய்விற்குப் பிறகு அணையின் நிமட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை வலுப்படுத்தும் பணிகள் முடிந்ததும், ஆய்வுக்குப் பின் 152 அடி வரை நீரினை தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து 10 ஆண்டுகள் கடந்தும், வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவிடாமல் கேரள அரசு தடுத்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் தற்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினை ஒப்பிட்டு சில சுயநலவாதிகள் சமூகவலை தளங்களில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. றிபி ஏடன் அவர்கள் 09-08-2024 அன்று மக்களவையில் பேசும்போது, முல்லைப் பெரியாறு அணை நான்கு பாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து மில்லியன் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், இது கோன மக்களுக்கு மிகப் பெரிய கவலையாக இருக்கிறது என்றும், ‘தண்ணீர் தமிழகத்திற்கு பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதுதான் தங்களின் முழக்கம் என்றும், மத்திய அரசு புதிய அணை கட்டி கோளத்தின் பாதுகாப்பினையும், தமிழ்நாட்டிற்கு தண்ணீரையும் உறுதி செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு மக்களவை உறுப்பினரான திரு. தீன் குரியகோஸ் அவர்கள் முல்லைப் பெரியாறு அணையை ‘தண்ணீர் குண்டு’ என்று தெரிவித்து, இது குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை மக்களவையில் சென்ற வாரம் அளிந்துள்ளார்.

இதுகுறித்து, கோள முதலமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு முல்லைப் பெரியாறு அணை பற்றி தற்போது எந்த கவலையும்படத் தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது. புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடருவதாக கேரள மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற திறனாய்வுக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கோள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மழக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயற்கை பேரழிவு எங்கு நடந்தாலும், அதளை முல்லைப் பெரியாறு அணையுடன் ஒப்பிட்டுப் பேசுவதை சிவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோளாவில் கனமழை பெய்து இடுக்கி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோதும், முல்லைப் பெரியாறு அணை பலபின்றி இருப்பதாக கூறப்பட்டது.

அதேபோன்ற கருத்து தற்போதும் பாட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற விஷமப் பிரச்சாரம் கடும் கண்டனத்திற்குரியது. கேரளாவின் இந்தச் செயல் தமிழக விவசாயிகளை பெரும்
கவலை அடைய வைத்துள்ளது.

புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கின்ற நிலையிலும், புதிய அணை கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலுப்படுத்த இதுபோன்ற யுக்திகளை அவ்வப்போது சிலர் மேற்கொள்கின்றனர். இந்த நிலையிலும், இதனை எதிர்த்து தி.மு.கூவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ வாய் திறக்காமல் இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கான உரிமை தாரைவார்க்கப்பட்டதுபோல், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக விவசாயிகளுக்குள்ள உரிமையும் காவுகொடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடையே நிலவுகிறது. இது தொடர்பாக, போராட்டங்களையெல்லாம் தமிழக விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

உரிமையா, உறவா என்றால் உரிமைதான் முக்கியம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, கேரளாவின் புதிய அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.

உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு வந்தால், அதனை வலுவான வாதங்களை வைத்து முறியடிக்கவும், தமிழ்நாட்டிற்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்தவும் மாண்டமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version