அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் முதல் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வந்த நிலையில் எந்த வித முன்னறிவிப்பின்றி அவர் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தற்போது . சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் . செந்தில் பாலாஜினியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரைத்துள்ளனர் . செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருந்ததும் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் .
இந்நிலையில் 17 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது .இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது :
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்டப் பிரச்சினை ஒன்றை இந்தத் தருணத்தில் முதன்மைப்படுத்தி அடக்குமுறையான சூழலை உருவாக்கியிருப்பது வருத்தமளிக்கிறது
செந்தில்பாலாஜியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையிலும், 17 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அவர் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது
அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது; இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார் .