மராட்டிய மாநிலத்தில் இயங்கி வந்த ஒன்றில் வேலை செய்து வந்த ஊழியர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை சூறையாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மராட்டிய மாநிலம் பட்லாபூரில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிகள் இரண்டு பேர், அங்கு பணிபுரியும் ஊழியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
வலியில் துடித்த சிறுமிகளை மருத்துவனைக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனை செய்ததில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியானது .
Also Read : திருப்பதியில் அக் 4ல் பிரம்மோற்சவம் தொடக்கம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
இதையடுத்து இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர் இருப்பினும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர், பள்ளியின் ஜன்னல்கள், கதவுகளை உடைத்து முற்றிலும் சூறையாடினர். இக்குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.