Site icon ITamilTv

தீர்ப்பில் என்ன எழுதிருக்கு? படிச்சிட்டு அப்புறம் ஆடுங்க Pugazhenthi ஆவேசம்

Spread the love

தீர்ப்பில் உள்ள குளறுபடிகளை கூறுவோம், மேல் முறையீட்டில் நீதி கிடைக்கும் என  ஒசூரில் வா புகழேந்தி  தெரிவித்து உள்ளார். 

அதிமுக ஓபிஎஸ் தரப்பு கொள்கை பரப்பு செயலாளர் வா புகழேந்தி ஒசூரில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

நாடே எதிர்பார்த்த தீர்ப்பை இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற ஆர்வத்தின் கோளாறு காரணமாக என்ன தீர்ப்பு வந்துள்ளது என்பதை முழுவதுமாக படிக்காமல் ஆர்ப்பாட்டம், கொண்டாட்டம், பட்டாசு வெடித்தல், இனிப்பு வழங்குதல் என்றெல்லாம் கொண்டாடினார்கள். தீர்ப்பு கைக்கு வந்த பின்னால் தெரிகிறது தெளிவாக புரிகிறது.

இதே தீர்ப்பில் 66 ஆவது பத்தியில் 6 வது விதியின்படி 7 நாட்களுக்குள் கட்சியை விட்டு நீக்குவதற்கு முன்னால் நீக்கப்படுபவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எதுக்கு இருப்பதாக நோட்டீஸ் கொடுத்து இருக்க வேண்டும் அந்த நடைமுறை பின்பற்றவில்லை, தீர்ப்பில் நிலுவையில் உள்ள சிவில் மெயின் வழக்கில் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

1.55 கோடி உறுப்பினர்கள் மீது கொண்டுள்ள அக்கறையால் பொதுச் செயலாளர் பதவி தொடரலாம் என கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் 5 வருட காலம் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தவோ மாற்றவோ முடியாத விதியின்படி ஒருங்கிணைப்பாளர் பதவியை பற்றி தீர்ப்பில் கூறப்படவில்லை, இந்தத் தீர்ப்பின் படி ஒருங்கிணைப்பாளரும் தொடர்கிறார் பொதுச்செயலாளரும் தொடர்கிறார் என்கின்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அவரவர் நீதிமன்றமும் நிலுவையில் உள்ள சிவில் மெயின் வழக்கு தான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பற்றி முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறது. இப்படிப்பட்ட தீர்ப்பில் உள்ள குளறுபடிளை எல்லாம் எங்களது வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டில் எடுத்து வைப்பார்கள், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று அவர் பேட்டி அளித்தார்.


Spread the love
Exit mobile version