Site icon ITamilTv

தமிழ்நாட்டில் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!

12th result

12th result

Spread the love

தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி ( 12th result ) அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அமைக்கைப்பட்ட 3,302 தேர்வு மையங்களில் 7.72 லட்சம் மாணவர்கள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் .

தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதியோடு வெற்றிகரமாக முடிந்தது .

இந்நிலையில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகி உள்ளது.

Also Read : நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது.

மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்;

EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 7,532 பள்ளிகளில்;

100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2478;

100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 397

இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 4.07% அதிகம் தேர்ச்சி ( 12th result ) பெற்றுள்ளனர்


Spread the love
Exit mobile version