நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான நடைமுறை இன்று முதல் அமலுக்கு ( tn epass ) வந்துள்ள நிலையில் அதற்கான பதிவுவும் தற்போது தொடங்கியுள்ளது .
சர்வதேச சுற்றுலா தளமாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை வெயிலின் அதிகமாக இருப்பதாலும் மற்றும் பள்ளி விடுமுறைகள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், அதிகளவில் வாகனங்கள் சுற்றுலா பயணிகள் வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் கூட வாகனங்கள் செல்ல முடியாமல் திணரும் நிலை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக இ – பாஸ் முறையை நடைமுறைபடுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர் .
Also Read : வாடகை வாகனம் – கடுமையான எச்சரிக்கை விதித்த போக்குவரத்து துறை
இந்த இ-பாஸ் முறை மே 7-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரை நடைமுறை படுத்தப்படுகிறது. இந்நினையில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதற்கான பதிவும் தற்போது தொடங்கியுள்ளது.
காலை 6 மணி முதல் இணையதளம் மூலம் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது .
ஜுன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.
epass.tnega.org என்ற இணையதளத்தின் வாயிலாக இ-பாஸ் பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.
பேருந்துகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டிய தேவை இல்லை.
வாகனங்களை முறைப்படுத்தவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.
இ-பாஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.
அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் ( tn epass ) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.