சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் கடுமையான ( vehicles ) நடவடிக்கை என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4 சக்கர வாகனங்கள் செயலிகளில் தங்களை இணைத்துக் கொண்டு பயணிகளை ஏற்றுக் கொண்டு வாடகைக்கு செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Also Read : அரசுக் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!
அதிகாரிகள் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டு 30,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் வரை RC ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதுகுறித்து போக்குவரத்து துறை பலமுறை எச்சரித்தும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவதும் அல்லது வாகன உரிமையாளர் தனியார் செயலிகளில் ( vehicles ) இணைத்துக்கொண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு வருவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் இனி இதுபோன்று நடந்தாலே கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .