Site icon ITamilTv

”பாதயாத்திரைக்கு ‘NO’ சொன்ன ஈபிஎஸ்..”ஓபிஎஸ்-ஸை.. அண்ணாமலையின் டுவிஸ்ட் !!

Spread the love

எடப்பாடி பழனிசாமி உடல்நிலை பாதிப்பு காரணமாக பங்கேற்பது உறுதியாகவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை(annamalai) தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் நாளை நடைபயணம் தொடங்குகிறார். இதற்காக ராமேஸ்வரம் புறப்பட்ட போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நாளை ராமேஸ்வரத்தில் என் மண், என் மக்கள் யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று தொடங்கி வைக்கிறார் . இந்த யாத்திரை 164 நாட்களில் 234 தொகுதிகள் செல்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ஜனவரி மாதத்தில் முடிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

யாத்திரை துவக்க விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் வருவார்களா? என்ற செய்தியாளர் கேள்விக்குசில கட்சித்தலைவர் சார்பாக துவக்கத்தில் வருகிறார்கள் சிலர் அவர்கள் சார்பாக தலைவர்கள் அனுப்புகிறார்கள். இந்த யாத்திரையின் மூலம் மோடிஜி அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பொதுமக்களிடம் கொண்டு செல்வது நோக்கம் என தெரிவித்தார்.

மேலும்,எடப்பாடி பழனிசாமி பாதயாத்திரையை புறக்கணித்தது குறித்த கேள்விக்கு? உடல்நிலை காரணமாக தனது பாதயாத்திரையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது உறுதியாகவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் பாத யாத்திரையில் பங்கேற்கலாம் என அண்ணாமலை பதிலளித்தார்.


Spread the love
Exit mobile version