நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி முடிவடைந்தன. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத 16.33 லட்சம் மாணவர்கள்,விண்ணப்பித்து இருந்தனர்.
இதில், 16.21 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இதில், 87.98 சதவீதம் பேர் குறிப்பாக, 14,26,420 பேர் தேர்ச்சி பெற்றனர்.கடந்த ஆண்டு 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த முறை தேர்ச்சி வீதம் 0.65 அளவு உயர்ந்துள்ளது.
மேலும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.20-க்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனி CBSC பாட புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத்..!
CBSE தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
- http://cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
- “Senior School Certificate Examination (Class XII) Results 2024” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்
- உங்கள் அட்மிட் கார்டில் கொடுக்கப்பட்டுள்ளபடி உங்கள் ரோல் எண், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
- விவரங்களை உள்ளிட்ட பிறகு, சமர்ப்பி என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்.
6.அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.