Site icon ITamilTv

அரசு மருத்துவர்களுக்கு திமுக அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும் – தெம்பூட்டிய துணை முதல்வர்..!!

sheild

sheild

Spread the love

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் அரசு மருத்துவர்களுக்கு திமுக அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும் இனி இதுபோன்று நடந்திராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் மீது, அங்கு சிகிச்சையிலுள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர் கொடூர முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை ஒரு போதும் ஏற்க முடியாது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரில் பார்வையிட்டு, சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம். மேலும், அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

Also Read : மாமுல் தர மறுத்த பெண் வியாபாரியை கொடூரமாக கொன்ற ரவுடி – இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க டிடிவி வலியுறுத்தல்..!!

மருத்துவர் பாலாஜி அவர்கள் பூரண குணமடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அவருக்கு அனைத்து வகையிலும் துணை நிற்கும். அவர் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அங்கு சிகிச்சை செல்வோர் முழு ஒத்துழைப்பு வழங்குவதும் – அரசு மருத்துவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இரவு – பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு கழக அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version