Site icon ITamilTv

காதல் மனைவியை கொன்று 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன் கைது..!!

thiruvannamalai

thiruvannamalai

Spread the love

திருவண்ணாமலையில் ஆசை ஆசையாய் காதலித்த காதல் மனைவியை கொன்று 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் காதல் மனைவி சரண்யாவை அவரது கணவர் கோபி கொலை செய்து உடலை 8 துண்டுகளாக வெட்டி, சூட்கேஸில் வைத்து கிருஷ்ணகிரி காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கொலை செய்யப்பட்ட சரண்யாவுக்கு, அவரது தாய் தீபாவளி வாழ்த்து கூற அழைத்தபோது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Also Read : பாமக கூட்டங்களுக்கு நிர்வாகிகள் காரில் வரக்கூடாது – ராமதாஸ் வலியுறுத்தல்..!!

இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நேராக கோபியை பிடித்து விசாரணை செய்துள்ளனர் அப்போது குடும்ப தகராறு காரணமாக சரண்யாவை கொலை செய்து அவரது உடலை 8 துண்டுகளாக வெட்டி, சூட்கேஸில் வைத்து தாய் மற்றும் நண்பரின் உதவியுடன் மனைவியின் உடல் பாகங்களைக் கிருஷ்ணகிரி காட்டுப் பகுதியில் கோபி வீசியதாக கோபி கூறியுள்ளார்.

இதையடுத்து கோபியை கைது செய்த போலீசார் மனைவியின் உடலை அப்புறப்படுத்த உடந்தையாக கோபியின் தாய், கார் ஓட்டுநர் விமல் ஆகியோரையும் பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலையில் ஆசை ஆசையாய் காதலித்த திருமணம் செய்த காதல் மனைவியை கொடூரமாக கொன்று 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version