சென்னையில் இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞரை போலீசில் பிடித்து கொடுத்து இளம் பெண் தக்க பாடம் புகட்டி உள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளால் ஒன்றான பழைய வண்ணாரப்பேட்டையில் 23 வயது பெண்ணை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரை அருண்குமார் என்பவர் கர்ப்பமாகி உள்ளார்.
கல்லூரி காலம் முதலே இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பம் தரித்ததும் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி அவரிடம் இருந்து விலகி செல்ல முயன்றுள்ளார் .
Also Read : காரைக்கால் : ஹெல்மெட் அணியாவிடில் மொபைல் செயலி மூலம் புகார்..!!
இதுமட்டுமின்றி இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பப்பாளி பழச்சாறை கொடுத்து ஈவிரக்கமின்றி கருவை கலைத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அந்த இளம்பெண்ணிடம் இருவரும் சேர்நது எடுத்த புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் அருண் குமார் மிரட்டியுள்ளார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் அருண் குமாருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என நினைத்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார் . இளம் பெண்ணின் புகாரை பெற்று கொண்ட போலீசார் அந்த புகாரின் பேரில் அருண் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.