விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஆவதற்கான கனவு நடக்காது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது :
விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஆவதற்கான கனவு நடக்காது. சமூகநீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Also Read : சிவகங்கை தனியார் வங்கியில் நடந்த மாபெரும் மோசடி – கொத்தாக சிக்கிய ஊழியர்கள்..!!
இரட்டை வேடம் போடும் திருமாவளவன் எப்படி ஒரு தலித் தலைவராக இருக்க முடியும்? திருமாவளவனை ஒரு சின்ன கட்சியின், அமைப்புக்கான தலைவராகத்தான் பார்க்கிறேன். ஆளுநர் உண்மையைச் சொன்னால் திமுகவினருக்கு கசக்கிறது.
ஆளுநருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே முரண்பாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.
டிடி தொலைக்காட்சி இந்தி விழா நிகழ்ச்சியில் ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். ஐநா சபையில் தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றியவர் பிரதமர் மோடி என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.