Site icon ITamilTv

Thoothukudi and Nellai Districts புதிய அறிவிப்புகள்

Thoothukudi and Nellai Districts

Thoothukudi and Nellai Districts

Spread the love

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளை (Thoothukudi and Nellai Districts) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தனி விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார் .

கடந்த 50 நாட்களுக்கு முன் வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்ற நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மாபெரும் தொழிற்சாலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது .

இதையடுத்து மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழவியில் , சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் தூத்துக்குடி, நெல்லை (Thoothukudi and Nellai Districts) மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஏக்கரில் வர்த்தக வசதி மையம் ₹25 கோடி செலவில் கட்டப்படும்.

வள்ளியூரில் மாவட்ட மருத்துவமனை கட்டடம் மற்றும் அம்பாசமுத்திரத்தில் புதிய மருத்துவமனை கட்டப்படும்.

வெள்ளத்தால் சேதமடைந்த நெல்லை மாஞ்சோலை சாலை ₹5 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

கோவில்பட்டியில் ₹10 கோடி மதிப்பில் கடலைமிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும்.

மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேம்பாரில் ₹7 கோடி மதிப்பில் பனைப் பொருட்கள் குறுங்குழுமம் அமைக்கப்படும் என பல புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Also Read : https://itamiltv.com/high-quality-ganja-in-chennai-shocking-information/

மேலும் அரசு சார்பில் மாவட்டந் தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் .

தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், பெரிய நிறுவனங்களை கொண்டு வர உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் .


Spread the love
Exit mobile version