அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையால் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி பாலாஜியை காண அதிகாலை முதல் தமிழக அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர் .
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக மத்திய விசாரணை குழுவான அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டதது .
பின்னர் திடீரென இரவோடு இரவாக எந்த வித முன்னறிவிப்பின்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்ததால் நெஞ்சுவலி ஏற்பட்டு தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார் .
சுயநினைவின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியை காண அதிகாலை முதல் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் , மா சுப்ரமணியன், நேரு, சேகர் பாபு , ஐ பெரியசாமி , ரகுபதி மற்றும் தொண்டர்கள் என பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர் .இதனால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுளள்னர் . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடத்திய சோதனை மற்றும் கைது நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்ரபை ஏற்படுத்திய நிலையில் திமுகவை பழிவாங்க பாஜகவின் மறைமுக தாக்குதல் தான் இது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .