ITamilTv

“களம் எதுவாயினும் கம்பீரமாக நடப்போம்” திமுக இளைஞரணி மாநாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்..!! செம வைரல்

Spread the love

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களுக்கு பெரும் தலைவலியாக மாறியது.இடுப்பு அளவிற்கு வெள்ள நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் இந்த பேரிடர் காலத்தில் தன்னலம் கருதாமல் பொதுநலம் காக்க திமுகவின் இளைஞரணி இரவு பகல் பாராமல் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு உதவியது குறித்தும் சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் போட்டுள்ள பதிவு தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் போட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது :

உடன்பிறப்புகள் அனைவரும் #CycloneMichaung துயர் துடைக்கும் பெரும் பணியில், வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும் வரை இமை துஞ்சாது செயலாற்றினர்!

@DMKITwing #WarRoom அமைத்து உதவும் பணிகள் உரிய இடங்களைச் சென்றடைய உறுதுணையாகியது!

நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழாகப் பாராட்டுகள் குவிந்தன!

பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் நமது #DravidianModel-ஐ நாடு முழுக்கக் கொண்டு சேர்க்கவுள்ள மக்களவைத் தேர்தல் களத்தை நோக்கி நம்மை ஆயத்தப்படுத்திட, மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் டிசம்பர் 24 அன்று சேலத்தில் தமது தலைமையில் நடைபெறும் @dmk_youthwing இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்க அழைக்கின்றார் அன்புத் தம்பி அமைச்சர் உதயநிதி ஸ்டலைன்.

களம் எதுவாயினும் கம்பீரமாக நடப்போம்! இளைஞரணி மாநாடு வெல்லட்டும்!! அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும்!!! என தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version