சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கி பேசினார்.
அப்போது பேசிய அவர், “இது அரசு விழாவா? மகளிர் விழாவா? என்னும் அளவிற்கு எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் வந்துள்ளீர்கள்.
இந்த விழாவிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது.
நம்முடைய கூட்டணியில் கூட கிடையாது.
அவர்கள் சேலம் மாவட்டத்துக்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு என் பாராட்டுகள் என ஒற்றுமையோடு பாராட்டினார்கள்.
அவர்கள் எப்போதுமே இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என உங்கள் சார்பில் நான் கேட்டுகொள்கிறேன்” எனது தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஒருவர் பச்சை பஸ் எடுத்துக்கொண்டு போகிறார்… ஒருவர் மஞ்சள் பஸ் எடுத்துகே கொண்டு போகிறார்…ஆனால், அவை அனைத்தையும் பிங்க் பஸ் ஜெயிக்கும்” என பிங்க் பஸ்ஸிற்கு புகழாரம் சூட்டினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பச்சை பஸ்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அதே போல், தவெக விஜய் மஞ்சள் சிகப்பு பஸ்சில் தந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.