ITamilTv

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் – விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்

Spread the love

VCK : நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Also Read : https://itamiltv.com/manjummel-boys-celebrated-in-tamil-nadu-movie/

இந்த போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட திரைப்படதயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

சென்னை மாவட்டம், மையசென்னை மண்டல துணைச் செயலாளர் திரு அ.முகமது சலீம், கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவருவதால் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகிறார்.

முகமது சலீம் உடன் யாரும் கட்சி தொடர்பாக (vck) எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version