நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள தேசிய மொழியான இந்தி மொழியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.விழாவில் அமித் ஷா பேசிய அவர்,
“உள்ளூர் மொழிகளும் இந்தி மொழியும் நமது கலாச்சாரத்தின் உயிர்நாடி. நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அலுவல் மொழியான ஹிந்தியைக் கற்க வேண்டும். இவற்றைப் புரிந்துகொள்ள உள்ளூர் மொழி வலுப்பெற வேண்டும் என்றார்.
மேலும் இந்தி மற்றும் உள்ளூர் மொழிகள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.இதனை தொடர்ந்து,பேசிய அவர் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்த நிலையில் தொடக்கக் கல்வி மற்றும் உயர்கல்விக்கு உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆராய்ச்சித் துறையிலும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தென் மாநிலங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஹிந்தியை ஒருங்கிணைக்கும் மொழியாக கற்கும் அமித்ஷாவிற்கு ஆலோசனையை எதிர்த்து கடுமையாக குற்றம் சட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து 258 மில்லியன் மக்களால் தாய்மொழியாகப் பேசப்படும் இந்தி, உலகில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, செப்டம்பர் 14ஆம் தேதியை இந்தி மொழியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
செப்டம்பர் 14, 1949 அன்று தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்தியை இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இந்திய அரசியல் நிர்ணய சபை அறிவித்தது. ஆங்கிலம் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.