ITamilTv

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கைது..! நள்ளிரவில் நடந்தது என்ன..?

Spread the love

தமிழகத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்கள் ,உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு என கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல துறைசார்ந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது .

அந்தவகையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக மத்திய விசாரணை குழுவான அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியது .

அமலாக்கத்துறை நடத்திய சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்ரபை ஏற்படுத்திய நிலையில் இரவோடு இரவாக எந்த வித முன்னறிவிப்பின்றி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் .

அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருக்கும் செந்தில் பாலாஜி சுயநினைவுக்கு திரும்பிய பின் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின் காரணமாக கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுளள்னர் . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்துள்ளார் .


Spread the love
Exit mobile version