Site icon ITamilTv

“ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்கப்போவது யார்..? – மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரி கேள்வி..!!

kharge question

kharge question

Spread the love

மேற்குவங்க மாநிலத்தில் நிகழ்ந்த கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்க போவது யார் என ( kharge question ) காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரியான பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இந்தியாவில் ரயில் விபத்துகள் அடுத்தடுத்து நடந்து வரும் வரும் நிலையில் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் மத்தியில் ஆளும் பாஜக கட்சினரை குறிப்பாக பிரதமர் மோடியிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர் .

இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கு வங்கம் மாநிலத்தில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 15 கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . 100 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்து வரும் நிலையில் இதுபோன்ற ரயில் விபத்துகள் அடிக்கடி நடைபெறுவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் மத்திய அரசு இதுகுறித்து தீவிர ஆலோசனை செய்து இனி இதுபோன்ற கோர ரயில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நிகழ்ந்த கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்க போவது யார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே சரமாரியான பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து கார்கே வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

ஒவ்வொரு முறை ரயில் விபத்து நிகழும்போதெல்லாம், ரயில்வே அமைச்சர் சம்பவ இடத்துக்கு கேமராக்களின் ஒளியின் கீழ் செல்வதும், அங்கே அனைத்தும் சுமூகமாக இருப்பதைப் போல நடந்துகொள்வதும் வாடிக்கையாகியுள்ளது.

இந்த விபத்துகளுக்கு யார் பொறுப்பு? நீங்களா? ரயில்வே அமைச்சரா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், கீழ்கண்ட 7 கேள்விகளுக்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் கார்கே தெரிவித்துள்ளார்.

Also Read : சிங்கள படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது – அன்புமணி கடும் கண்டனம்

ஒடிஸாவில் பாலசோரில் நிகழ்ந்ததைப் போன்ற பெரும் விபத்தைத் தொடர்ந்து, ரயில் விபத்துகளை தடுக்கும் கவச் தொழில்நுட்பம் ஒரு கிலோமீட்டருக்கு கூட இணைக்கப்படவில்லை?

ரயில்வேயில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன? அவையனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்படாதது ஏன்?

என்சிஆர்பி 2022 அறிக்கையின்படி, 2017 – 2021 இடைப்பட்ட காலத்தில்,ரயில் விபத்துகளால் மட்டும் சுமார் 1 லட்சம் மக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு யார் பொறுப்பு?

நிகழும் ரயில் விபத்துகளில், 8 – 10 சதவீத விபத்துகளை மட்டுமே ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கிறது. இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையம் வலுப்படுத்தப்படாமல் இருப்பது ஏன்?

சிஏஜியின்படி, ஒவ்வோர் ஆண்டும் ரூ. 20,000 கோடி தொகை ஈட்டப்படும் போதும், ‘ராஷ்திரிய ரயில் சுரக்‌ஷா கோஷ்’ திட்டத்தில் 75 சதவீத நிதி குறைக்கப்பட்டுள்ளது, இந்த நிதி, ரயில்வே அதிகாரிகளால் தேவையற்ற செலவினங்களுக்காகவும், வசதிகளை அதிகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுவது ஏன்?

சாதாரண படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிக்க அதிக செலவாகிறது ஏன்? படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டிருப்பதும் ஏன்?

பொறுப்பேற்பதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மோடி அரசு ரயில்வே நிதிநிலை அறிக்கையை பொது பட்ஜெட்டுடன் 2017-18இல் இணைத்துள்ளதா? தங்களைத் தாமே, சுயமாக புகழ்ந்திடுவதன் மூலம், இந்திய ரயில்வேயை கண்டுகொள்ளாமல் மோடி அரசு தவறிவிட்டதை ஈடுகட்ட முடியாது. இவையனைத்துக்கும் பொறுப்பேற்பதை முதன்மையாக்க வேண்டும்! ( kharge question ) எனப் கார்கே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version