Site icon ITamilTv

காங்கிரசில் யார் யாருக்கு சீட் கன்ஃபர்ம் தெரியுமா..?

Seat Confirmation In Congress

Seat Confirmation In Congress

Spread the love

Seat Confirmation In Congress : கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்கியது திமுக.

அதில், தேனி தவிர திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கன்னியாகுமரி, ஆரணி, கிருஷ்ணகிரி திருவள்ளூர் ஆகிய இடங்களில் வெற்றி பெற்றது காங்கிரஸ்.

இதையும் படிங்க : VigneshShivan – Nayan Divorce Rumors : விக்கினேஷ் சிவன் – நயன் விவாகரத்தா? – இத்துணூண்டு பாலோக்காக..!!

இந்நிலையில், தற்போதும், காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே தொகுதிகள்தான் ஒதுக்கப்படுமா என்ற கேள்விகள் அக்கட்சியினரிடயே எதிர்பார்ப்பை கிளப்பி வருகின்றன.

இது குறித்து திமுக தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம் நாம். “எது எப்படி இருந்தாலும், ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்த தேனி மக்களவை தொகுதியை இந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்குவதில்லை என முடிவு செய்யப் பட்டிருக்கிறது.

எனவே, திமுகவே நேரடியாக போட்டியிடும் அங்கு மா.செ.வான தங்க தமிழ்ச் செல்வன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

அதே போல, திருச்சியில் காங்கிரஸ் சிட்டிங் வேட்பாளராக இருப்பது திருநாவுக்கரசர். ஆனால், இந்த முறை வைகோ தன் மகன் துரை வையாபுரிக்காக திருச்சியை எதிர்பார்ப்பதால் அதையும் தர இயலாது.

ஆரணி மக்களவை தொகுதியின் தற்போதைய எம்.பி. விஷ்ணு பிரசாத். ஏற்கனவே காங்கிரஸ் உட்கட்சி பிரச்சனைகளால் மீண்டும் ஆரணி தொகுதி ஒதுக்க்கப்பட்டால் அது விஷ்னு பிரசாத்துக்கே செல்லும் என்பதால்,

“லோக்கல்” பாலிடிக்ஸை சரி செய்வதற்காக காங்கிரஸ் தலைமையே இம்முறை ஆரணி வேண்டாம் என சொல்லி விட்டது.

இதையும் படிங்க : கோவையில் அண்ணாமலை..! – ரகசிய சர்வே எடுத்த திமுக..!

மற்றொரு புறம், கரூர் காங்கிரஸ் எம்.பியாக இருக்கும் ஜோதி மணிக்கு மீண்டும் கரூர் தொகுதி செல்வதில் தனக்கு துளியும் விருப்பமில்லை என தலைமைக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் சிறையில் உள்ள எக்ஸ் மினிஸ்டர் செந்தில் பாலாஜி.

இதனால், அங்கும் திமுகவே நேரடியாக போட்டியிடலாமா என்ற சிந்தனையிலும் உள்ளது. ஆனால், அது இன்னும் உறுதியாகவில்லை.

அதே போல, திமுக எடுத்த சர்வே ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளின் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதும் நெகடிவ் ரிப்போர்ட் வந்திருப்பதால், “ஒன்னு கேண்டிடேட்டை மாத்துங்க.

இல்ல தொகுதியை மாத்திகுங்க..” என திமுக தலைமையே அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அது காங்கிரஸ் கட்சியின் விவகாரம் என்பதால் அவர்கள் தான் இதில் முடிவெடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் கடிதம்!

தற்போதைய நிலவரப்படி தேனி, திருச்சி, ஆரணி தொகுதிகளுக்கு பதிலாக மயிலாடுதுறை, கடலூர் மற்றும் ஈரோடு தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக ஆலோசித்து வருகிறது” (Seat Confirmation In Congress) என்றனர் அவர்கள்.

அதே போல, கார்த்தி சிதம்பரம், மாணிக் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் சில முக்கியப் புள்ளிகள் மீண்டும் அதே தொகுதியில் பசை போட்டு ஒட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Spread the love
Exit mobile version