Who will replace Senthil Balaji? : “சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பதிலாக யாரை நியமிக்கப் போகிறது திமுக தலைமை? என்பதை ஸ்மெல் செய்வதற்காக பாஜகவும்,
மத்திய உளவு அமைப்புகளும் கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக் கொண்டிருக்கும் போது சத்தமே இல்லாமல் ஒரு கேம் சேஞ்சர் வேலையை அரங்கேற்றி இருக்கிறது திமுக.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தாலும், யாரும் எதிர்பாராத வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக சறுக்கியது திமுக.
இது, கொங்கு மண்டலத்தில் திமுகவின் துருப்பிடித்த கட்டமைப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்த கட்சித் தலைமை, கட்சிக்கு அங்கு புத்துயிர் ஊட்டும் வேலைகளில் உடனடியாக இறங்கியது.
அதன் விளைவாக, கோவை மண்டலத்தின் பொறுப்பாளராக களமிறக்கப்பட்டார் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி.
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தி அவர்களை வேலை செய்ய வைப்பது மட்டுமல்லாமல், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களையும் அதிரடியாக திமுகவில் இணைத்து தனது அதிரடி நடவடிக்கைகளால் அதிமுக, பிஜேபி என அந்த 2 கட்சிகளையுமே தினற வைத்தார் செந்தில் பாலாஜி.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட லோக்கல் ஆட்களை மட்டுமே நம்பாமல், தனது சொந்த ஊரான கரூரில் இருந்து ஒரு டீமை கோவையில் கொண்டு வந்து இறக்கி, தீயாய் அவர் வேலை பார்த்ததால் தான்,
மொத்தம் 100 வார்டுகளைக் கொண்ட கோவையில் 96 வார்டுகளை திமுகவால் கைப்பற்ற முடிந்தது என்பதை எதிர்க்கட்சிகள் கூட கூச்சமின்றி சொல்லும் அளவுக்கு இருந்தது அவரது தேர்தல் வேலை.
இதனால், “கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் கால் பதிக்க வேண்டும்” என்ற பாஜகவின் ஆசையிலும் கூட மண்ணை அள்ளிப் போட ஆரம்பித்தார் செந்தில் பாலாஜி.
ஆனால், கடந்த முறை ஜெயலலிதா காலத்தில் அவரது அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி மீது திமுக போட்ட ஒரு வழக்கே எமனாக மாறி, எதிர்பாராத வகையில் விஸ்வரூபம் எடுத்து செந்தில் பாலாஜியை சிறைச்சாலை வரை கொண்டு சென்றது.
இதையும் படிங்க : பா.ஜ.க. – அ.ம.மு.க. கூட்டணி – தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது!
கடந்த சுமார் 8 மாதங்கள் வரை புழல் சிறையில் இருக்கும் அவரது ஜாமீன் மனுவானது 24 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பரபரப்பான இந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் கொங்கு மண்டலத்தை எப்படி சமாளிக்கப் போகிறது திமுக? என்பதிலும்,
அதற்கு பொறுப்பு அமைச்சர்களாக செந்தில் பாலாஜிக்கு பதிலாக யாரை நியமிக்கப் போகிறது? என தெரிந்து கொள்வதிலும் ரொம்பவே ஆர்வமாக இருந்தது பிஜேபி தரப்பு.
அதனால், பாஜகவின் பார்வையெல்லாம் கோவை மீது இருந்தாலும், “செந்தில் பாலாஜிக்கு பதிலாக யார்?” என்பதை அறிந்து கொள்ள தன் காதுகளை மட்டும் அறிவாலயத்தில் வைத்திருந்தது பாஜக என்றே கூறலாம் Who will replace Senthil Balaji?.
ஆனால், தேர்தல் தேதி அறிவிவிக்கப்பட்ட பிறகும் கூட செந்தில் பாலாஜிக்கு பதிலாக கோவை மண்டலத்திற்கு பொறுபாளர்கள் யாரும் நியமிக்கபடாத நிலையில், வேட்பாளர் அறிவிப்பு வெளியான இன்று கோவை விசயத்தில் முக்கிய முடிவெடுத்துள்ளது திமுக.
அதன்படி, கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கரூர், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று பொறுப்பாளர்களை நியமித்துள்ளது திமுக தலைமை.
அதன்படி, புதுக்கோட்டை எம்.பியான எம்.எம். அப்துல்லாவை கரூர் பாராளுமன்ற தொகுதிக்கும்,
தமிழக தொழில்துறை அமைச்சரும் , திமுகவின் தகவல் தொழில் நுட்பட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி. ராஜாவை கோவை பாராளுமன்ற தொகுதிக்கும்,
தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரான சக்கரபாணியை பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கும் திமுக சார்பாக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து உத்தரவிட்டிருக்கிறதாம் திமுக தலைமை.
“தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இந்த பாராளுமன்ற தேர்தலுக்குள் ஜாமீன் கிடைத்து அவர் வெளியில் வந்து விடுவார் என தீவிரமாக நம்பியிருந்தது திமுக தலைமை.
அப்படி வந்து விட்டால் அவரை வைத்தே பழையபடி கோவையில் களமாடவும் முடிவு செய்திருந்தது திமுக.
ஆனால், வேட்பாளர் பட்டியல் வெளியிடும் வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காத சூழ்நிலையில்தான், இன்று அந்த கேம் சேஞ்சர் வேலைக்கு ஓ.கே. சொன்னது திமுக தலைமை” என தகவல் கசிய விடுகிறது அறிவாலய வட்டாரம்.
இதையும் படிங்க : விஜயகாந்தின் சொந்த ஊரில் போட்டியிட விஜய பிரபாகரன் விருப்பமனு
செந்தில் பாலாஜி இடத்தை நிரப்பப் போவது யார்…?