எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க குரல் எழுப்பப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகளுக்கு 2,100 கோடி லஞ்சம் |கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது இதன் எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளன .
இந்நிலையில் அதானி லஞ்ச புகார் விவகாரம் தொடர்வதாக டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார் :
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க குரல் எழுப்பப்படும் .
அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ளபோதும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருகிறார். இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Also Read : நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27இல் தீர்ப்பு..!!
அதானிக்கு எதிராக இந்தியாவில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதானி குழுமத்தை பிரதமர் மோடி பாதுகாத்து வருகிறார் . பிரதமர் மோடி இருக்கும்வரை, அதானி இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார். அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும்
தொழிலதிபர் அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், மேலும் அவரை பாதுகாத்துவரும் செபி தலைவர் மதாபி புச் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது செபியின் தோல்வியை காட்டுகிறது; மாதபி பூச்சுக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது ஏற்கனவே வெளியாகியுள்ளது; அவரைப்போல வேறு யாரெல்லாம் இதலிஃ சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.