Site icon ITamilTv

வரதட்சணை கொடுமையில் கொடூரமாக கொல்லப்பட்ட மனைவி – உ.பியில் நடந்த பகீர் சம்பவம்..!!

Wife

Wife

Spread the love

உ.பியில் வரதட்சணை கொடுமையில் மனைவி கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி: அம்ரோஹா பகுதியில் ₹3 லட்சம் பணம், பைக் வரதட்சணையாக தராததால், மனைவியை கணவரே கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார் .

உ.பி மாநிலம் அம்ரோஹாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனா மற்றும் சுந்தர் ஆகியோருக்கு பெற்றோர்களை நிச்சயமிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு 3 லட்சம் பணம், பைக் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுக்க வே வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திருமணம் ஆன பின் கேட்ட வரதட்சணை கிடைக்காததால் மீனா மற்றும் சுந்தர் இடையே மோதல் வெடித்துள்ளது.

Also Read : நடிகர் சித்தார்த்தை கரம்பிடித்தார் நடிகை அதிதி ராவ் – இணையத்தை கவர்ந்த வைரல் போட்டோஸ்..!!

நாளுக்கு நாள் வரதட்சணை தொடர்பாக கணவர் சுந்தர் தொடர்ந்து பிரச்னை செய்து வந்ததாகவும் இதனால் மனைவி மீனா கோபத்தில் பெற்றோர் வீட்டுக்குச் சென்றதாகவும் , அடிக்கடி அங்கு சென்று சமாதானம் பேசி, வீட்டுக்கு கூட்டி வந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதேபோல் கணவன் மனைவி இடையே சண்டை வர மீனா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்ல சுந்தர் சமாதானம் பேசி மீண்டும் அழைத்து வந்துள்ளார் இதையடுத்து சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் சண்டை வர தலைக்கேறிய கோபத்தில் இருந்த சுந்தர் மீனாவை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார் .

இதையடுத்து பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள சுந்தரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Spread the love
Exit mobile version