Site icon ITamilTv

கணவருக்காக விரதமிருந்து அவரையே கொன்ற மனைவி – உ.பியில் நடந்த திகில் சம்பவம்..!!

Fasting

Fasting

Spread the love

கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ விரதம் இருந்த மனைவி, உணவில் விஷம் வைத்துக் கணவரையே கொன்ற அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ விரதம் இருந்து, ‘கர்வா சவுத்’ கொண்டாடிவிட்டு, சில மணி நேரத்திலேயே கணவருக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளார்.

கணவர் சைலேஷ் குமாருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது . இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் சாமாதானமாகி ஒன்றாகவே சாப்பிட்டுள்ளனர்.

Also Read : காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானில் உருவானது : 9 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு..!!

உணவு உண்ட சில நிமிடங்களில் மயங்கி விழுந்த சைலேஷ் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சைலேஷின் மனைவியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மெர்க்ண்டு வருகின்றனர்.

இதையடுத்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.


Spread the love
Exit mobile version