Tamilnadu

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சவால் – உச்சநீதிமன்றம் சென்ற Seenivasa Sethupathi!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான K. R. Periyakaruppan மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் Seenivasa Sethupathi அவரை வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

இதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்படவில்லை என்று கூறி பெரியகருப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் சீனிவாச சேதுபதி பங்கேற்க தற்காலிக தடை விதித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவரின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் Abhishek Manu Singhvi வாதாடினார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி Surya Kant இந்த மனுவை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் தங்களது தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் வழங்கக்கூடாது என பெரியகருப்பன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *