தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ( 4 crore issue ) நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஏப்ரல் 22 ஆம் தேதி ஆஜராகுமாறு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்
நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது .இதற்காக வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர வாகன சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பயணிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Also Read : https://itamiltv.com/senthilbalajis-judicial-custody-extended-for-32nd-time/
மேலும் அவர்களிடம் சோதனை செய்ததில் பா.ஜ.க உறுப்பினர் என்பதற்கான அட்டையும் சிக்கின. இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ( 4 crore issue ) ஏப்ரல் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்