Site icon ITamilTv

9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்..!!

4th phase polling

4th phase polling

Spread the love

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ( 4th phase polling ) உள்ள 96 தொகுதிகளில் இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுசேரியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது . இதையடுத்து கேரளா கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

Also Read : தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து – ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!!

பின்னர் குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, உத்தரப் பிரதேசம்,உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கான 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து இன்று ஆந்திரா- 25, தெலங்கானா – 17, பீகார் 5, ஜம்மு -1, ம.பி. 8, மகாராஷ்டிரா 11, ஒடிசா 4, உ.பி. 13, மே.வங்கம் 8, ஜார்க்கண்ட் 4 தொகுதிகள் உட்பட 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ( 4th phase polling ) வாக்கு பதிவின் போது எந்த வித அசம்பாவிதமும் நடைபெற கூடாது என்பதற்காக ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.


Spread the love
Exit mobile version