India

நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா..- குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம்!

வீட்டில் பணம் குவிந்து கிடந்ததாக எழுந்த சர்ச்சையையடுத்து, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தீயணைப்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஒரு அறையில் எரிந்த நிலையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய மூட்டைகளை கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தரப்பினர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றக் குழு விசாரணையைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு தனது ராஜினாமா கடிதத்தை யஷ்வந்த் வர்மா சமர்ப்பித்துள்ளார். அதில், மனவேதனையுடன் தனது பதவியை விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *