Tamilnadu

மகனை காணாமலேயே பிரிந்த உயிர்.. – சவுக்கு சங்கர் தாயார் காலமானார்!

சவுக்கு மீடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கரின் தாயார் கமலா இன்று காலமானார்.

சிறையில் உள்ள நிலையில் தன் மகனை நேரில் காண முடியாமல் அவர் உயிரிழந்தது குடும்பத்தினரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் இரண்டு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றம் அவருக்கு மார்ச் 25ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் காலம் முடிந்ததும் அவர் நீதிமன்றத்தில் சரணடையாமல் தலைமறைவானார். இதையடுத்து காவல்துறை தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தது.

பின்னர் கடந்த 8ஆம் தேதி ஆந்திராவில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்மீது குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சவுக்கு சங்கரின் தாயார் கமலா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தனது மகனை சட்ட நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் கமலா தொடர்ந்து ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சிறையில் உள்ள நிலையில் தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *