India

மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு.. மசோதாக்கள் வாக்கெடுப்பில் தோல்வி!

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மக்களவை நேற்று கூடியது.

அதன்படி, தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மக்களவையில் தாக்கல் செய்தனர்.

குரல் வாக்கெடுப்பிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரிவு வாரியான வாக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

முடிவில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களை அறிமுகம் செய்வதற்கு எதிராக 185 வாக்குகளும், ஆதரவாக 251 வாக்குகளும் பதிவானது.

இந்நிலையில், திருத்தச் சட்டம் தவிர மற்ற இரு மசோதாக்களை விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளித்தார்.

12 மணிநேர விவாதத்திற்குப் பிறகு, இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதன்படி எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின்படி ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும பெற்று மக்களயைில் தோல்வியடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *