Tamilnadu

விஜய்க்கு சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் ஆதரவு..- பெரும்பான்மையை உறுதிசெய்த தவெக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.

இதையடுத்து காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. முதலில் காங்கிரஸ் சில நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க சம்மதித்தது.

பின்னர் சிபிஎம், சிபிஐ ஆகிய இரு இடதுசாரி கட்சிகளும் நிபந்தனையற்ற வெளி ஆதரவை அறிவித்தன. இதற்கிடையில் விசிக தலைவர் திருமாவளவன் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

அதேசமயம், திமுக கூட்டணியில் இருந்த ஐ.யூ.எம்.எல். கட்சியும் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

தொடர்ந்து, ஆதரவு கடிதங்களுடன் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு சென்று நன்றி தெரிவித்தார். தற்போது தவெகவுக்கு மொத்தம் 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பெரும்பான்மை எட்டியுள்ள தவெக தலைவர் விஜய் விரைவில் முதலமைச்சராக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *