சென்னை மகாபலிபுரத்தில் நடந்த தவெக மகளிர் தின விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “கவலைப்படும் அளவுக்கு வொர்த் கிடையாது” என்று தனது விவாகரத்து குறித்து பேசினார். இதற்கு தவெக கட்சி நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் விஜய்யின் பேச்சை காட்டமாக விமர்சித்து அவருக்கு அடுக்கடுக்காய் பல கேள்விகளை எழுப்பி இருந்தார்.
விஜயை கடுமையாக விமர்சித்த நாச்சியார்
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, “விஜய்யுடன் 25 வருடங்கள் வாழ்ந்து இரண்டு குழந்தைகளை பெற்ற மனைவிக்கே விஜய்யைப் பார்க்க அனுமதியில்லாத நிலை இருக்கிறது. நடுவில் ஒரு நபர் இருக்கிறார். அந்த நபர் யார் என்று தேவைப்பட்டால் சொல்வேன். விஜய்க்கு அப்படி என்ன கோபம்? எதற்கு உங்கள் முன் இத்தனை தடைகள்? யாரையும் சந்திக்கவிடாமல் தடுப்பது ஏன்? தாய் – தந்தை கூட விஜய்யைச் சந்திக்க முடியாமல் தடுத்து நிறுத்துகிறார்கள்” என்று தெரிவித்து இருந்தார்.
திமுகவில் முதல்வர் முன்னிலையில் இணைப்பு
இந்நிலையில் தற்போது தவெக-வில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’, ரஜினியின் ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் ரஞ்சனா நாச்சியார்.
யார் இந்த ரஞ்சனா நாச்சியார்?
ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவருக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாலா சித்தப்பா. இயக்குநர் பாலாவின் அண்ணன் மகளான இவர் முதலில் டிவி சீரியலில் நடித்தார். பிறகுதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
இவர் நடிகையாக அறிமுகமான திரைப்படம் ‘துப்பறிவாளன்’. சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததோடு விஜய் டிவி புகழை வைத்து படம் தயாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
