RSS பேரணியை தொடங்கிவைத்ததால் அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அதிமுக கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும்; அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு முரணான மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், M.L.A., தான் வகித்து வரும் அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்திருந்தார்.
Also Read : திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறை – CBFC அறிமுகம்..!!
இந்நிலையில் பொறுப்புகளில் நீக்கப்பட்ட 40 நாட்களில் தற்போது மீண்டும் தளவாய் சுந்தரத்திற்கு அதே பொறுப்புகள் வழங்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.