ITamilTv

ஓ.பி.எஸ்., டிடிவி-யின் விருப்பத் தொகுதிகள்..!- கமலாலயத்தில் இருந்து கசிந்த தகவல்

bjp alliance

Spread the love

bjp alliance இதுவரை, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக முன்னேற்ற கழகம், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி அமைத்திருந்த நிலையில், பாஜக மேலிடத் தலைவர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து தமிழகம் வந்த பிறகே தோழமை கட்சிகளுடன் உடனான கூட்டணி பேச்சு வார்த்தையே சூடு பிடித்தது.

சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் வைத்து ஓ.பி.எஸ். அணியினருடன் ஆலோசனை, அடுத்த நாள் திருச்சியில் இருந்த டிடிவி தினகரனுடன் பேச்சு வார்த்தை என அடுத்தடுத்து கூட்டணி குறித்த முடிவுகள் இறுதியடைய துவங்கின. ஆனாலும், ஓ.பி.எஸ்.சுக்கு எத்தனை தொகுதிகள், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகளை பாஜக ஒதுக்க தயாராக உள்ளது என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி கள நிலவரம்!

எனவே, ஓ.பி.எஸ். அணி மற்றும் அதன் சகோதர கட்சியாக கருதப்படும் அமமுக ஆகியவை எந்தெந்த தொகுதிகளை குறி வைத்துள்ளன என்பதை அறிவதற்காக ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான தேனி மாவட்ட முக்கிய புள்ளி ஒருவரிடம் பேசினோம்.

“தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ரொம்பவே பலமாக இருக்கும் ஓ.பி.எஸ். அணிக்கு வட மாவட்டங்களிலும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவு ஆதரவாளர்கள் உள்ளனர். எனவே பாஜக கூட்டணியில் தென் மாவட்டங்களில் தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளிலும்bjp alliance,

வட மாவட்டங்களில் கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கொங்கு மண்டலத்தில் கோவை பராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட விரும்புவதாக பாஜகவுடன் நடந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் தெரிவித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

இதையும் படிங்க: BREAKING | “போhttps://x.com/ITamilTVNews/status/1767438089327444476?s=20தைப்பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்துக!”

அதே போல டிடிவி தரப்பில், ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, தென்சென்னை, வேலூர், நீலகிரி, நாகப்பட்டிணம், விழுப்புரம், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய 10 பாராளுமன்ற தொகுதிகளை தங்கள் விருப்பத் தொகுதிகளாக பாஜகவிடம் அளித்திருப்பதாக தெரிகிறது. இனி, முடிவு செய்ய வேண்டியது பாஜக தான்” என்றார் அவர்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஓ.பி.எஸ். அணி, டிடிவி ஆகிய இருவரும் ஆளுக்கு 10 தொகுதிகள் வீதம் மொத்தம் 20 தொகுதிகளை கேட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து பாஜக தரப்பில் இது குறித்து பேசினோம். “ஓ.பி.எஸ். அணி மற்றும் டிடிவி தினகரனுக்கு ஒதுக்கப்படவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து தற்போது வரை எந்த இறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆனாலும், அவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 5 தொகுதிகள் வீதம் மொத்தம் 10 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்பதே தலைவர்களின் கருத்தாக உள்ளது. கூட்டணியில் மேலும் சேரும் கட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இது குறையுமே தவிர, கூடுவதற்கு வாய்ப்பே இல்லை” எனக் கூறினார் கலமாலயத்துக்கு நெருக்கமான நபர்.


Spread the love
Exit mobile version