Site icon ITamilTv

பாஜகவின் லோக்சபா தேர்தல் அறிக்கை வெளியீடு – என்னென்னெ வாக்குறுதிகள் உள்ளது தெரியுமா..?

BJP's election manifesto

BJP's election manifesto

Spread the love

பாஜகவின் லோக்சபா தேர்தல் அறிக்கையினை அக்கட்சி தற்போது (BJP’s election manifesto) வெளியிட்டுள்ளது .

எதிர்வரும் லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தங்களது தேர்தல் பரப்புரைகளை தீவிரபடுத்தி உள்ளனர்.

இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களது கட்சியில் இருக்கும் திரை பிரபலங்கள் ,பிரபல அரசியல் தலைவர்கள் என அனைவரும் மக்களிடம் நேரடியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜகவின் லோக்சபா தேர்தல் அறிக்கையினை அக்கட்சி தற்போது வெளியிட்டுள்ளது .

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் (BJP’s election manifesto) தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் பின் வருமாறு..

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும்

3 கோடி பெண் லட்சாதிபதிகள் உருவாக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிக்கப்படும்.

2025ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்டாக கொண்டாடப்படும்.

70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பயன்பெறலாம்.

மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.

2036ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

முத்ரா யோஜனா கடன் உச்சவரம்பு 20 லட்சமாக உயர்த்தப்படும்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும்.


Spread the love
Exit mobile version